மேலும் செய்திகள்
மாணவி கர்ப்பம்; வாலிபருக்கு 'போக்சோ'
14-Oct-2025
திருவாரூர்: கல்லுாரி மாணவியிடம், பாலியல் ரீதியாக அத்துமீறிய மாணவர் மீது, போக்சோ வழக்கு பதியப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே, சோழங்கநல்லுாரை சேர்ந்த, 17 வயது சிறுவர், மன்னார்குடி அரசு கலைக் கல்லுாரியில், முதலாம் ஆண்டு படிக்கிறார். அதே பகுதியை சேர்ந்த, 17 வயது சிறுமி, மன்னார்குடியில், தனியார் மகளிர் கல்லுாரியில் அறிவியல் பட்டப்படிப்பில், முதலாம் ஆண்டு படிக்கிறார். இருவரும் ஒரே பகுதியை சேர்ந்தவர்கள் என்பதால், பழக்கம் ஏற்பட்டு, காதலித்து வந்தனர். கடந்த மாதம், 8ம் தேதி, ஆசை வார்த்தை கூறி, மாணவி சிறுமி என்று தெரிந்தும், அவரை அந்த மாணவர் வெளியூர் அழைத்துச் சென்று, பாலியல் ரீதியாக அத்துமீறியுள்ளார். இது குறித்து, மாவட்ட குழந்தைகள் நல அலுவலருக்கு புகார் வந்தது. இதை உறுதி செய்த அவர், திருத்துறைப்பூண்டி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார், நேற்று முன்தினம், கல்லுாரி மாணவர் மீது, போக்சோவில் வழக்கு பதிந்துள்ளனர்.
14-Oct-2025