உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிபுதியம்புத்தூர் பள்ளி சாதனை

மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிபுதியம்புத்தூர் பள்ளி சாதனை

புதியம்புத்தூர்:மாவட்ட தடகள மற்றும் குழு விளையாட்டுப் போட்டிகளில் புதியம்புத்தூர் பள்ளி வெற்றிகளை குவித்துள்ளது.ஓட்டப்பிடாரம் மெக்கவாய் பள்ளியில் நடந்த இவ்விளையாட்டுப் போட்டிகளில் புதியம்புத்தூர் ஜான் தி பாப்டிஸ்ட் பள்ளி 17 வயதிற்குட்பட்ட மாணவர்க்கான பூப்பந்து போட்டியில் முதலிடத்தையும், 14 மற்றும் 17 வயதிற்கான மாணவிகள் கோ-கோ போட்டியில் முதலிடத்தையும் பெற்றனர். 19 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கான பூப்பந்து மற்றும் கைப்பந்து போட்டிகளில் 2ம் இடத்தையும் பெற்றனர். தடகள போட்டிகளில் 17 வயதிற்குட்பட்ட மாணவிகள் பிரிவில் ஸ்டெல்லா மேரி 100மீ நீளம் தாண்டுதலில் முதலிடத்தையும், 200 மீ மற்றும் ட்ரிபில் ஜம்ப் போட்டியில் 2ம் இடத்தையும் பெற்று சாம்பியன் பட்டத்தையும் பெற்றார்.14 வயதிற்குட்பட்ட மாணவர்கள் தடகள போட்டியில் தட்டு எறிதலில் 2ம் இடத்தையும், 19 வயதிற்குட்பட்ட மாணவர் பிரிவில் பாரத்குமார் தட்டு எறிதலில் முதலாம் இடத்தையும், இம்மானுவேல் குண்டு எறிதலில் 2ம் இடத்தையும், 1500 மீ ஓட்டத்தில் வீரப்பெருமாள் 2ம் இடத்தையும், சைக்கிள் போட்டியில் செந்தில்முருகன் மற்றும் தவரூபினி 2ம் இடத்தையும் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளையும், பயிற்சியளித்த உடற்பயிற்சி ஆசிரியர்கள் ஜோதிபாஸ் மற்றும் நெல்சன் ஆகியோரை பள்ளி தலைமையாசிரியர் ஜெயபாண்டியன், தாளாளர் சுதன்கீலர், ஆசிரிய, ஆசிரியர்கள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்