உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / பஸ் வசதி செய்து தரபொதுமக்கள் கோரிக்கை

பஸ் வசதி செய்து தரபொதுமக்கள் கோரிக்கை

எட்டயபுரம்:கடலையூர் மற்றும் சுற்றுவட்டார 15 கிராம பொதுமக்களின் நலன் கருதி கடலையூரிலிருந்து எட்டயபுரம் வழியாக தூத்துக்குடிக்கு பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். இக்கிராம பொதுமக்கள் எட்டயபுரம் தாலுகா அலுவலகத்துக்கு சென்று பட்டா மாறுதல், பள்ளி குழந்தைகளுக்கு ஜாதி சான்றிதழ், வருமான சான்று, இருப்பிட சான்று போன்ற சான்றிதழ்கள் பெறுவதற்காக அடிக்கடி எட்டயபுரம் தாலுகா அலுவலகத்துக்கு வரவேண்டியுள்ளது. மேலும் மாவட்ட தலைநகரமான தூத்துக்குடிக்கு சென்று வர கடலையூரிலிருந்து தூத்துக்குடிக்கு நேரடியாக பஸ் வசதி இல்லை. எனவே கடலையூரிலிருந்து தூத்துக்குடிக்கு எட்டயபுரம் வழியாக பஸ்கள் இயக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ