உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / இலவச கம்ப்யூட்டர் பயிற்சி முகாம் திறப்புவிழா

இலவச கம்ப்யூட்டர் பயிற்சி முகாம் திறப்புவிழா

தூத்துக்குடி:தூத்துக்குடி மாவட்ட தேமுதிக.,சார்பில் இலவச கம்ப்யூட்டர் பயிற்சி மையம் திறப்பு விழா நடந்தது.தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஏழை எளிய மாணவ, மாணவியர் வாழ்வில் பயன்பெற தேமுதிக., சார்பில் இலவச கணினி பயிற்சி மையம் தூத்துக்குடி புதுக்கிராமத்திலுள்ள தேமுதிக.,அலுவலகத்தில் திறக்கப்பட்டது. இதன் திறப்பு விழாவிற்கு தெற்கு மாவட்ட செயலாளர் சண்முகராஜா தலை மை வகித்தார். கம்ப்யூட்டர் பயிற்சி மையத்தை மாநில மீனவரணி செயலாளர் பீட்டர்ராஜ் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் மாநில தொழிற்சங்க துணை செயலாளர் ஆறுமுகநயினார், மாவட்ட மாணவரணி செயலாளர் சேக்உமர், மாவட்ட மகளிரணி செயலாளர் வெண்ணிலா, மாவ ட்ட துணை செயலாளர் துளசி ஜெயபிரகாஷ், மாவட்ட தொண்டரணி செயலாளர் முருகையா பாண்டியன், மாநகர செயலாளர் பவானிமுத்துராஜ், மாநகர துணை செயலாளர் மாடசாமி, காயல்பட்டிணம் நகர செயலாளர் சதக் அப்துல்லா, ஒன்றிய செயலாளர்கள் மணிகண்டன், தசரத பாண்டியன், ராஜேந்திரன், விஸ்வபெருமாள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை