உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / எப்போதும்வென்றான் அருகே மாணவர் வெட்டி கொலை

எப்போதும்வென்றான் அருகே மாணவர் வெட்டி கொலை

தூத்துக்குடி:எப்போதும்வென்றான் அருகே பாலிடெக்னிக் மாணவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:எப்போதும்வென்றான் அருகே உள்ள மேலச்செய்த்தலையை சேர்ந்தவர் முனீஸ்வரன். இவரது மனைவி பாலம்மாள். இவர்களுக்கு பாலமுருகன்(21), சோலைச்சாமி(16) என்ற 2 மகன்கள் உள்ளனர். பாலமுருகன் சாயர்புரத்தில் உள்ள ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில் படித்துவந்தார்.

முனீஸ்வரன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். இந்நிலையில் பாலமுருகனுக்கும் அதேபகுதியைச்சேர்ந்த தங்கத்துரை என்பவரின் மனைவி சுசீலாவுக்கும் தொடர்பு ஏற்பட்டது. இது தங்கத்துரைக்கு தெரியவரவே இரண்டு பேரையும் கண்டித்துள்ளார். ஆனாலும் அவர்களின் தொடர்பு நீடித்துவந்தது. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாலமுருகன் சுசீலாவை வெளியூருக்கு அழைத்துசென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தங்கத்துரை போலீசில் புகார் செய்தார்.

போலீசார் இருவரையும் மீட்டு வந்தனர். இதை தொடர்ந்து தங்கதுரை சுசீலாவை சாயர்புரம் அருகேயுள்ள நடுவக்குறிச்சியில் உள்ள அவருடைய பெற்றோர் வீட்டுக்கு அனுப்பிவைத்து விட்டார். அதற்கு பிறகும் பாலமுருகன் சுசீலாவின் தொடர்பு நீடித்துவந்தது. இதனால் பாலமுருகனுக்கும் தங்கத்துரைக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இதைத்தொடர்ந்து பாலமுருகன் எப்போதும்வென்றான் அருகேயுள்ள காட்டுநாயக்கன் பட்டியில் தனியாக ஒரு வீடு எடுத்து தங்கியுள்ளார். அப்போது சுசீலாவின் நகைகளை வாங்கிவைத்திருந்தாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த தங்கத்துரை தனது நண்பர் சிவலிங்கத்துடன் பாலமுருகன் வீட்டிற்கு சென்று நகைகளை தருமாறு கூறியுள்ளார். இதில் இருவருக்கும் தகராறு ஏற்படவே தகராறு முற்றி அரிவாளால் பாலமுருகனை வெட்டியுள்ளார்.

உடன் வந்த சிவலிங்கமும் அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. பாலமுருகன் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த பொதுமக்களை பார்த்து தங்கத்துரையும், சிவலிங்கமும் தப்பி ஓடியுள்ளனர். இதில் தங்கத்துரை மட்டும் பொதுமக்களிடம் மாட்டிக்கொள்ளவே அவரை எப்போதும்வென்றான் போலீசில் ஒப்படைத்தனர். தப்பிஓடிய சிவலிங்கத்தை போலீசார் தேடிவருகின்றனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். இந்தசம்பவம் அந்தப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை