உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / இடைநின்ற மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி முகாம்

இடைநின்ற மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி முகாம்

சாத்தான்குளம் : கீழராமசாமியாபுரம் புனித அன்னாள் உயர்நிலைப்பள்ளியில் இடைநின்ற மாணவர்களுக்கான குறுகிய கால சிறப்பு பயிற்சி முகாம் நடந்தது.பள்ளியில் இடைநின்ற மாணவர்களை ஒன்றாக இணைத்து அவர்களுக்கு அடிப்படை எழுத்துப் பயிற்சியைக் கொடுத்து மற்ற மாணவர்களோடு சேர்ந்து படிக்க வைக்கும் இணைப்பு பயிற்சியை அரசு செய்து வருகிறது. இந்த கல்வியாண்டில் தூத்துக்குடி மாவட்டம் கீழராமசாமியாபுரம் புனித அன்னாள் உயர்நிலைப்பள்ளியை இப்பயிற்சிக்கு மையமாக தமிழக அரசு தேர்ந்தெடுத்துள்ளது. இதன் மூலம் இப்பயிற்சி மையத்தில் பயின்று வரும் மாணவ, மாணவிகளுக்கு சீருடை, காலணி, எழுது பொருட்கள் உட்பட சுமார் ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 22 வகையான பொருட்கள் வழங்கப்பட்டது. இந்த விழாவிற்கு உடன்குடி வட்டார வளமைய மேற்பார்வையாளர் சுனில் தலைமை வகித்தார். ஆசிரியர் பயிற்றுநர் ராஜேஸ்வரி முன்னிலை வகித்தார். பள்ளி தலைமையாசிரியர் பஸ்க ராஸ் வரவேற்றார். மாவட்டக் கல்வி அலுவலர் தமிழ்ச்செல்வி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கினார். மாவட்ட கல்வி அதிகாரி தமிழ்ச்செல்வி கல்வி கற்காமல் இடைநின்ற மாணவர்கள் இப்பயிற்சியை நன்கு பயன்படுத்தி மற்ற மாணவர்களைப் போல கல்வியில் உயர வேண்டும் எனவும் திட்டத்தை சிறப்பாக நடத்தி வரும் பள்ளித் தலைமையாசிரியர் பஸ்கராஸ், தாளாளர் இருதயராஜ் அடிகளார் ஆகியோரை பாராட்டுவதாகவும் தெரிவித்தார். ஆசிரியர் பொன்மேரி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ