உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / புரட்டாசி சனிக்கிழமை விழா வனத்திருப்பதியில் கோலாகலம்

புரட்டாசி சனிக்கிழமை விழா வனத்திருப்பதியில் கோலாகலம்

உடன்குடி: வனத்திருப்பதியில் புரட்டாசி சனிக்கிழமை திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.வனத்திருப்பதி புன்னை ஸ்ரீநிவாசபெருமாள் ஆதிநாராயணர்-சிவனணைந்த பெருமாள் கோயிலில் புரட்டாசி சனிக்கிழமை திருவிழாவையொட்டி காலை 5 மணிக்கு நடைதிறக்கப்பட்டது. தொடர்ந்து மூலவர் திருமஞ்சனம், சிறப்பு அலங்கார பூஜையும், காலை 8.30 மணிக்கு திருவாராதனம் தளிகை, சாத்துமுறை கோஷ்டி, பகலில் உச்சிகால பூஜை நடந்தது. சுவாமி தரிசனம் செய்ய வருகை தரும் பக்தர்களுக்கு ஹோட்டல் சரவணபவன் சார்பில் காலை முதல் இரவு வரை அன்னதானம் வழங்கப்பட்டது. பக்தர்கள் காலை முதலே நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.பக்தர்களின் வசதிக்காக திருச்செந்தூர்-வனத்திருப்பதி-நெல்லைக்கு காலை 9.20 மணிக்கும், பகல் 11.40 மணிக்கும், நெல்லை-வனத்திருப்பதி-திருச்செந்தூருக்கு பகல் 12மணி, மாலை 3 மணிக்கும் சிறப்பு பாசஞ்சர் ரயில்கள் இயக்கப்பட்டது.மேலும் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருச்செந்தூர் ஆகிய பகுதிகளில் இருந்து வனத்திருப்பதிக்கு சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டது. இது போன்று வரும் புரட்டாசி சனிக்கிழமை 1ம் தேதியும் வனத்திருப்பதியில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்படுகிறது.ஏற்பாடுகளை கோயில் நிறுவனர் ராஜகோபால், ஹோட்டல் சரவணபவன் முதன்மை நிர்வாகி கணபதி, சிற்பி கணசேன், கோயில் அதிகாரி வசந்தன், செல்வராஜ் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை