உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / பன்றி கூட்டங்களால் ஆத்தூர் மக்கள் அவதி

பன்றி கூட்டங்களால் ஆத்தூர் மக்கள் அவதி

ஆத்தூர் : ஆத்தூரில் பெருகி வரும் பன்றி கூட்டங்களால் பொதுமக்கள் பெரும் தொல்லைக்கு ஆளாகி வருகின்றனர்.ஆத்தூர் பகுதி தெருக்களில் பன்றி கூட்டங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. ஆத்தூர் மெயின் பஜார், ரதவீதிகள் உட்பட்ட தெருக்களில் பன்றிகளின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. குறுக்கும் நெடுக்குமாக தெருக்களில் பன்றிகள் அடிக்கடி பாய்வதால் பெண்களும், குழந்தைகளும் பயந்து அலறியடித்து ஓடும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே தெரு விலங்குகளால் ஆத்தூர் பகுதியில் போக்குவரத்துக்கு இடைஞ்சல் ஏற்பட்டு சிறுசிறு விபத்துக்களும் ஏற்பட்டு வந்த நிலையில் தற்போது பன்றிகளும் சேர்ந்துள்ளதால் பொதுமக்கள் தொடர்ந்து தொல்லைக்கு ஆளாகி வருகின்றனர். எனவே ஆத்தூர் பகுதியில் பன்றி உட்பட்ட தெரு விலங்குகளை ஒழித்துக் கட்ட உரிய நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுத்து பொதுமக்களை காக்க வேண்டுமென அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ