உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / ஆறுமுகநேரியில் போலீசார் கொடி அணி வகுப்பு

ஆறுமுகநேரியில் போலீசார் கொடி அணி வகுப்பு

ஆறுமுகநேரி : ஆறுமுகநேரியில் இருந்து அம்மன்புரம் வரை போலீசார் நேற்று மாலை போலீஸ் கொடி அணி வகுப்பு நடத்தினர்.அகில இந்திய நாடார் பாதுகாப்பு பேரவை நிறுவன தலைவர் மூலக்கரை வெங்கடேஷ்பண்ணையார் 8வது ஆண்டு வீரவழிபாடு வரும் 26ம் தேதி அம்மன்புரத்தில் நடக்கிறது. வெங்கடேஷ் பண்ணையார் உருவப் படம் வைக்கப்பட்ட வீர ரதஊர்வலம் முத்தையாபுரத்தில் இருந்து அம்மன்புரம் வரும். இதை முன்னிட்டு நேற்று மாலை ஆறுமுகநேரியில் இருந்து அம்மன்புரம் வரை போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தினர். தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி.,நரேந்திரன் நாயர் தலைமையில் ஏராளமான போலீசார் கலந்து கொண்டனர். இதில் திருச்செந்தூர் டிஎஸ்பி ஞானசேகரன், ஆறுமுகநேரி இன்ஸ்பெக்டர் பார்த்தீபன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை