உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / தூத்துக்குடி மாவட்டத்தில்தாசில்தார்கள் அதிரடி மாற்றம்

தூத்துக்குடி மாவட்டத்தில்தாசில்தார்கள் அதிரடி மாற்றம்

தூத்துக்குடி:தூத்துக்குடி மாவட்டத்தில் தாசில்தார்கள் அதிரடி மாற்றம் செய்து கலெக்டர் டாக்டர் செல்வராஜ் உத்தரவிட்டுள்ளார். தூத்துக்குடி புதிய தாசில்தாராக கலியுகவரதன் நியமிக்கப்பட்டுள்ளார்.தூத்துக்குடி மாவட்டத்தில் தாசில்தார்கள் சிலர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தூத்துக்குடி தாசில்தாராக பணியாற்றி வந்த கந்தசாமி எட்டயபுரம் தாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளார். தூத்துக்குடி சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராக பணியாற்றி வந்த கலியுகவரதன் தூத்துக்குடி ரெகுலர் தாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளார்.எட்டயபுரம் தாசில்தாராக பணியாற்றிய சுப்பையன் ஓட்டப்பிடாரம் தாசில்தாரக நியமிக்கப்பட்டுள்ளார். ஓட்டப்பிடாரம் தாசில்தாராக பணியாற்றிய மணி தூத்துக்குடிசமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளார்.தூத்துக்குடி சிப்காட் தனித் தாசில்தாராக பணியாற்றிய கருப்பசாமி சாத்தான்குளம் ரெகுலர் தாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளார். சாத்தான்குளம் தாசில்தார் அய்யாத்துரை சிப்காட் தனி தாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளார். தாசில்தார் மாற்றங்களுக்கான உத்தரவை கலெக்டர் டாக்டர் செல்வராஜ் பிறப்பித்துள்ளார்.சாத்தான்குளம் ரெகுலர் தாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ள கருப்பசாமி ஏற்கனவே தூத்துக்குடி ரெகுலர் தாசில்தாராக பணியாற்றியவர். மீண்டும் அவருக்கு சாத்தான்குளம் ரெகுலர் தாசில்தாராக பணியாற்றும் வாய்ப்பு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும். இதுபோன்ற சான்ஸ் கிடைப்பது மிக அரிது என்று வருவாய்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி