| ADDED : ஜூலை 15, 2011 03:20 AM
தூத்துக்குடி:தூத்துக்குடியில் மாவ ட்ட மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின்
செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு தலைவர் வேல்முருகன் தலைமை
வகித்தார். மாநகர தலைவர் காமராஜ் முன்னிலை வகித்தார். மாநில பொதுச்
செயலாளர் சொக்கலிங்கம் கலந்து கொண்டு பேசினார். மாவட்ட செயலாளர் பாபு,
மாவட்ட பொருளாளர் சொக்கராமலிங்கம், மாநகர செயலாளர் கோமதி நாயகம், துணைத்
தலைவர் செல்வராஜ், மாவட்ட இளைஞரணி தலைவர் ராஜேந்திர பூபதி, வட்டாரத்
தலைவர்கள் அருணாச்சல பாண்டியன், நடராஜன், பால்துரை, மாநகர செயற்குழு
உறுப்பினர்கள் சாத்தாவு, ராஜபெருமாள் மற்றும் பலர் கலந்து கொண்டு பேசினர்.
கட்டுமானத்திற்கான மணல் தட்டுப்பாட்டினால் கட்டடத் தொழிலாளர்கள் பெரிதும்
பாதிக்கப்படுகின்றனர். எனவே மணல் முதலிய கட்டுமான பொருட்கள் விலை
குறைவாகவும், தாரா ளமாகவும் கிடைக்குமாறு செய்திட மாவட்ட நிர்வாகத்தை
வலியுறுத்துவது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.