உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / பீடி தொழிலாளர்கள் பேரவை கூட்டம்

பீடி தொழிலாளர்கள் பேரவை கூட்டம்

ஸ்ரீவைகுண்டம், ஆக.19- ஸ்ரீவைகுண்டத்தில் பீடி தொழிலாளர்கள் பேரவை கூட்டம் நடந்தது. ஸ்ரீவைகுண்டம் அருகே கொங்குராயகுறிச்சியில் நடந்த கூட்டத்திற்கு ஆரோக்கியம் தலைமை வகித்தார். தொழிற்சங்க தலைவர் கந்தசாமி தீர்மானங்களை பற்றி விளக்கி பேசினார். கூட்டத்தில் முருகன், சி.பி.எம் செயலாளர் இராமலிங்கம் மற்றும் பீடி தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் தரமான பீடி இலை, தூள் வழங்க வேண்டும், கொங்குராயகுறிச்சியில் இதற்கான கிளை அலுவலகம் திறக்கப்படவேண்டும், ரூ 10 பிடித்தம் செய்வதை நிறுத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகள் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டது. இதற்காக வரும் 24 ம் தேதி கம்பெனி முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது. முருகன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ