உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / சாத்தை.,யில் விவசாய சங்கம் ஆர்ப்பாட்டம்

சாத்தை.,யில் விவசாய சங்கம் ஆர்ப்பாட்டம்

சாத்தான்குளம் : சாத்தான்குளத்தில் விவசாய சங்கம் மற்றும் விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.பாம்பு கடித்து இறக்கும் விவசாய குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும், குடிமனை இல்லாதவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும், விவசாய தொழிலாளர் பாதுகாப்புத் திட்டம் என்ற புதிய திட்டத்திற்கு சட்ட அங்கீகாரம் வழங்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய சங்கம் மற்றும் விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் சாத்தான்குளம் தாலுகா அலுவலகத்தின் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட துணைச் செயலாளர் பாலசுந்தரகணபதி தலைமை வகித்தார்.விவசாய சங்க மாவட்ட துணைத் தலைவர் பிச்சையாதாஸ், மா.கம்யூ., சாத்தான்குளம் ஒன்றியச் செயலாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் பேசினர். பெண் தொழிலாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ