உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / திருச்செந்துாரில் 50 அடி உள்வாங்கிய கடல் உள்ளூர் விடுமுறையால் அலைமோதிய பக்தர்கள்

திருச்செந்துாரில் 50 அடி உள்வாங்கிய கடல் உள்ளூர் விடுமுறையால் அலைமோதிய பக்தர்கள்

துாத்துக்குடி:திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு தினமும் பக்தர்களின் வருகை அதிகரித்து வருகிறது. விடுமுறை நாட்களில் திருவிழா போன்று மக்கள் கூட்டம் அதிகளவில் காணப்படுகிறது. பனிமய மாதா சர்ச் திருவிழாவை முன்னிட்டு, துாத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்ததால், வழக்கத்தைவிட பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருந்தது.இதற்கிடையே, கோவில் கடற்கரை பகுதியில் சுமார் 50 அடி துாரத்திற்கு உள்வாங்கி காணப்பட்டது. நாழிக்கிணறு பகுதியில் இருந்து அய்யா கோவில் வரை சுமார் 400 மீட்டருக்கு கடல் உள்வாங்கியிருந்தது. இதனால், பாசி படிந்த பாறைகள் வெளியே தெரிந்தன.இருப்பினும், பக்தர்கள் சிலர் ஆபத்தை உணராமல் பாறைகள் மீது நின்று செல்பி எடுத்து மகிழ்ந்தனர். மேலும், சேதமடைந்ததால் பல்வேறு இடங்களில் இருந்து கடலுக்குள் வீசப்பட்டிருந்த சுவாமி சிலைகள் சில வெளியே தெரிந்தன. அவற்றை பக்தர்கள் கடற்கரை பகுதியில் எடுத்து வைத்துச் சென்றனர்.திருச்செந்துாரை பொறுத்தவரை அமாவாசை, பவுர்ணமி சமயங்களில் சில நாட்கள் முன்னும், பின்னும் கடல் உள்வாங்குவது வாடிக்காக நிகழ்ந்து வருகிறது என உள்ளூர் பக்தர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை