உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / கனிமொழிக்கு எதிராக களம் கண்ட அமைச்சரின் சகோதரருக்கு 6,640

கனிமொழிக்கு எதிராக களம் கண்ட அமைச்சரின் சகோதரருக்கு 6,640

துாத்துக்குடி:துாத்துக்குடி லோக்சபா தொகுதியில் தி.மு.க., சார்பில் கனிமொழி உள்ளிட்ட 28 வேட்பாளர்கள் போட்டிட்டனர். கனிமொழி, 5 லட்சத்து 40,729 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். 27 பேரும் டிபாசிட் இழந்தனர். அவர்களில், நாம் இந்தியர் கட்சியின் தலைவர் ராஜாவும் ஒருவர். அவர் 6,640 ஓட்டுகள் பெற்றார்.சமூக நலன், மகளிர் உரிமைத் துறை அமைச்சரும், வடக்கு மாவட்ட தி.மு.க., செயலருமான கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோரின் சகோதரரான ராஜா, பிரசாரத்தின்போது, தி.மு.க.,வை கடுமையாக விமர்சித்தார். குடும்பத்துக்குள் ஏற்பட்ட பிரச்னை காரணமாகவே, கனிமொழியை எதிர்த்து ராஜா களம் கண்டதாக கூறப்படுகிறது. அவர் இந்த தேர்தலில், 6.640 ஓட்டுகளை மட்டுமே பெற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ