உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / திருச்செந்துார் முருகன் கோவிலுக்கு 978 கிராம் தங்க காசு மாலை உபயம்

திருச்செந்துார் முருகன் கோவிலுக்கு 978 கிராம் தங்க காசு மாலை உபயம்

துாத்துக்குடி: ராமநாதபுரம் மாவட்டம், பெருநாழி பகுதியை சேர்ந்தவர் போஸ், 67. மதுரை கே.கே.நகரில் வசித்து வரும் இவர், அரசு ஒப்பந்ததாரராகவும் உள்ளார். இந்நிலையில், நேற்று போஸ், தன் மனைவி மல்லிகா மற்றும் குடும்பத்தினருடன் நேற்று திருச்செந்துார் கோவிலுக்கு வந்தார்.பக்தியுடன் சுவாமி தரிசனம் செய்த அவர், கோவில் மூலவருக்கு 70 லட்சம் ரூபாய் மதிப்பிலான 978 கிராம் எடை உடைய, 90 காசுகள் அடங்கிய தங்க காசு மாலையை இணை கமிஷனர் கார்த்திக்கிடம் உபயமாக வழங்கினார். கோவில் உள்துறை கண்காணிப்பாளர்கள் அற்புத மணி, விஜயலட்சுமி, சுபிதா, பேஸ்கார் ரமேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.இதுகுறித்து போஸ் கூறியதாவது: திருச்செந்துார் கோவிலில், மாதந்தோறும் தவறாமல் தரிசனம் செய்வேன். மூன்று மகள்களுக்கு திருமணமானதும் தங்க காசு மாலை நேர்த்திக்கடன் செலுத்துவதாக வேண்டியிருந்தேன். 18 ஆண்டு கால வேண்டுதல் இப்போது நிறைவேறி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

இந்தியா பிச்சை எடுக்க போகிறது உங்களால்
ஜூலை 09, 2024 18:46

பல அனாதை ஆஸ்பத்திரில சோறு இல்லாம எத்தனையோ பேர் தவிக்கிறான் அவனுக்கு உன்னால சோறு போட முடியல, நீ இந்தியால கொள்ளை அடிச்ச பணத்தை கோயில் கொடுக்கிற, ஏண்டா அவன் சோறு இல்லாம எவ்வளவு பிச்சை எடுத்துட்டு அவனுக்கு உதவி செய், கொள்ளையடிச்ச பணத்தை எப்படி கோயிலுக்கு குடுத்து திரும்பி அது என்ன வந்து அரசாங்கத்துக்கு கொடுத்து திரும்பி கொள்ள அடிக்கிறீங்களா நீங்களே


RAAJU
ஜூலை 09, 2024 11:59

உபயம் முருகனுக்கு அல்ல அது சேகர் பாபுவுக்கு.


மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி