உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / பெண்ணிடம் ரூ.38 லட்சம் மோசடி செய்தவர் சிக்கினார்

பெண்ணிடம் ரூ.38 லட்சம் மோசடி செய்தவர் சிக்கினார்

துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டம், நாலாட்டின் புதுாரை சேர்ந்த பெண் ஒருவருக்கு, முகநுாலில் வாலிபர் ஒருவர் அறிமுகமானார். அந்த பெண்ணுக்கு, 'கிப்ட் பார்சல்' ஒன்றை அனுப்புவதாக அவர் கூறியுள்ளார். சில நாட்கள் கழித்து சுங்கத்துறை அலுவலகத்தில் இருந்து பேசுவதாக கூறி, அந்த பெண்ணிடம், 'வெளிநாட்டில் இருந்து வந்த பார்சலில் நகைகள், ஐபோன், வெளிநாட்டு கரன்சி ஆகியவை உள்ளன. அதற்கான, 'பிராசசிங்' கட்டணம் செலுத்த வேண்டும்' என, கூறியுள்ளார். நம்பிய பெண், செயலிகள் வாயிலாக பல்வேறு தவணைகளாக, 38 லட்சத்து, 19,300 ரூபாயை அனுப்பியுள்ளார்.தொடர்ந்து, பார்சல் ஏதும் வராததால் ஏமாற்றமடைந்த பெண், சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். துாத்துக்குடி எஸ்.பி., பாலாஜி சரவணன் உத்தரவின்படி, சைபர் கிரைம் போலீசார் தொழில்நுட்ப ரீதியாக விசாரித்தனர்.இதில், வேலுார் மாவட்டம், அரக்கோணம் அருகே அக்கச்சிகுப்பத்தை சேர்ந்த முத்து, 32, மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. சென்னை, சோழிங்கநல்லுாரில் முத்துவை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி