உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / காதல் ஜோடியை மிரட்டி நகை பறித்த போலீஸ்காரர் சிக்கினார்

காதல் ஜோடியை மிரட்டி நகை பறித்த போலீஸ்காரர் சிக்கினார்

துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டம், சண்முகபுரத்தைச் சேர்ந்தவர் பாலகணேஷ். இவரது காதலியுடன் முத்துநகர் கடற்கரையில் இருந்தார். அப்போது, அங்கு வந்த ஒருவர், பாலகணேஷை மிரட்டி, அவரது காதலியின் தங்கச் செயினை பறித்துச் சென்றார். பாலகணேஷ், வடபாகம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் தெரிவித்தார். போலீஸ் விசாரணையில், நகை பறிப்பில் ஈடுபட்டவர் துாத்துக்குடி, திரேஸ்புரத்தைச் சேர்ந்த டென்னிஸ்ராஜ் என, தெரிந்தது. மேலும், டென்னிஸ்ராஜ் திருநெல்வேலி மாவட்டம், மணிமுத்தாறு பட்டாலியன் போலீஸ்காரராக இருப்பதும் தெரிந்தது.தலைமறைவாக இருந்த டென்னிஸ்ராஜை வடபாகம் போலீசார் நேற்று கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்