| ADDED : ஜூன் 06, 2024 08:13 PM
துாத்துக்குடி:துாத்துக்குடி மூன்று செண்ட் அந்தோணியார்புரம் பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ், 35. இவரது அண்ணன் டெய்சி சில ஆண்டுகளுக்கு முன் கொலை செய்யப்பட்டார். அந்த கொலை வழக்கில் தொடர்புடைய அந்தோணி என்பவரை நண்பர்களுடன் கொலை செய்ததாக விக்னேஷ் மீது வழக்கு உள்ளது.இதில், ஜாமீன் பெற்ற விக்னேஷ் வழக்கு விசாரணைக்காக துாத்துக்குடி கோர்ட்டில் நேற்று முன்தினம் ஆஜராகி உள்ளார். இந்நிலையில், தாளமுத்துநகர் பகுதியில் உள்ள ஒரு மதுக்கடை அருகே விக்னேஷ் திடீரென மயக்கம் ஏற்பட்டு உயிரிழந்தார். அவரது தலையில் லேசான காயம் இருந்ததாகக் கூறப்படுகிறது. போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இதுகுறித்து, விக்னேஷ் நண்பர்கள் கூறியதாவது:விக்னேஷின் சகோதரர் டெய்சி கொலை வழக்கில் தொடர்புடைய அந்தோணியை கொலை செய்த வழக்கில் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்திருந்தார். இந்த வழக்கு துாத்துக்குடி கோர்ட்டில் நடந்து வருகிறது. அதில், அவரது நண்பர் செல்வகுமாருடன் சேர்ந்த ஆஜராகினார்.பின்னர், இருவரும் சோட்டையன்தோப்பில் உள்ள வின்னேஷின் அண்ணன் கபில்தேவ் என்பவரது வீட்டில் தங்கியிருந்தனர். இரவில், தாளமுத்துநகர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்றபோது, விக்னேஷ் மயங்கி விழுந்து இறந்துள்ளார். அவரது தலையில் ரத்தக்காயம் உள்ளதால் சந்தேகம் உள்ளது. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.