உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / வங்கி, ஏ.டி.எம்.,களில் கொள்ளை முயற்சி: துாத்துக்குடி வாலிபர் கைது

வங்கி, ஏ.டி.எம்.,களில் கொள்ளை முயற்சி: துாத்துக்குடி வாலிபர் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடியில் வங்கி கிளை மற்றும் ஏ.டி.எம்., களில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட வாலிபர் கைது செய்யப்பட்டார்.மார்ச் 27ல் தூத்துக்குடி தென்பாகம் பிரையன்ட் நகர் பகுதியில் உள்ள வங்கி ஏ.டி.எம்., மார்ச் 28ல் புதுக்கோட்டை அருகே கூட்டுடன் காடு பகுதியில் உள்ள வங்கி ஏ.டி.எம்., மில் கொள்ளை முயற்சி நடந்தது. ஏப்.22ல் தூத்துக்குடி சிதம்பரம் நகரில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளையில் பூட்டுகளை உடைத்து கொள்ளை முயற்சி நடந்தது. இச்சம்பவங்களில் பதிவான சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் இவற்றில் ஈடுபட்டது தூத்துக்குடி கோரம்பள்ளம் சோரீஸ்புரம் ஜேசுராஜ் மகன் காட்வின் ஜோஸ் 29, எனத்தெரிய வந்தது. அவரை கைது செய்த போலீசார் கொள்ளை முயற்சிக்கு பயன்படுத்திய உபகரணங்களையும் பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்