உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / கூட்டுறவு வங்கி மேலாளர் பலியான சம்பவம்: சிசிடிவி காட்சிகள் மூலம் விசாரணை

கூட்டுறவு வங்கி மேலாளர் பலியான சம்பவம்: சிசிடிவி காட்சிகள் மூலம் விசாரணை

தூத்துக்குடி:ஸ்ரீவைகுண்டம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் மேலாளர் தீயில் கருகி பலியான சம்பவத்தின் சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் விசாரிக்கின்றனர்.தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி மேலாளர் ஸ்ரீதரன் 52. நேற்று முன்தினம் அங்கு கூட்டுறவு துறை உயரதிகாரிகள் அங்கு ஆய்வு மேற்கொள்வதாக இருந்தது. அதற்கு முன்பாக சக ஊழியர்களை சாப்பிட அனுப்பிவிட்டு தனது அறையில் பெட்ரோலை தெளித்து தீ வைத்துள்ளார். தீ பற்றி கொண்டதில் ஏற்பட்ட புகை மூட்டத்தில் சிக்கி அவர் பலியானார்.கூட்டுறவு வங்கியில் நகை, பண பிரச்னையில் அவர் தற்கொலை செய்து இருக்கலாமா எனக் கூட்டுறவுத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். வங்கி லாக்கரில் இருந்த 276 பாக்கெட்டுகள் அடகு நகைகளையும் சோதித்தனர். நகைகள் முழுவதும் அப்படியே இருந்தன. மூன்று லட்சத்து 46 ஆயிரம் ரூபாயும் லாக்கரில் இருந்தது. எதுவும் குறையவில்லை. எனவே அவர் பலியானதற்கான காரணம் குறித்து அலுவலக சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை