உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / பட்டாசு ஆலை தீ விபத்து உயிரிழப்பு 4 ஆக உயர்வு

பட்டாசு ஆலை தீ விபத்து உயிரிழப்பு 4 ஆக உயர்வு

துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டம், நாசரேத் அருகே குறிப்பன்குளத்தில் சிவசக்தி பட்டாசு ஆலை கிடங்கில், ஆக., 31ல் தீ விபத்து ஏற்பட்டது. பணியில் இருந்த அரசர்குளத்தை சேர்ந்த முத்துக்கண்ணன், 21, கமுதியை சேர்ந்த விஜய், 25, உயிரிழந்தனர்.திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த புளியங்குளத்தை சேர்ந்த செல்வம், 25, கடந்த 1ம் தேதி இறந்தார். பட்டாசு ஆலை உரிமையாளரான திருமறையூரை சேர்ந்த ராம்குமார், 40, என்பவரை நாசரேத் போலீசார் கைது செய்தனர்.தீ விபத்தில் காயமடைந்து, திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த செம்பூரை சேர்ந்த ஐசக் பிரசாந்த், 23, நேற்று அதிகாலை உயிரிழந்தார். இதன் வாயிலாக, உயிரிழந்தோர் எண்ணிக்கை நான்காக அதிகரித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை