மேலும் செய்திகள்
துபாய் தொழிலதிபர் வெட்டி கொலை
09-Dec-2025
எஸ்.ஐ., கணவர் கொலை வழக்கில் விவசாயி கைது
05-Dec-2025
பைக் மீது கார் மோதல் வியாபாரி மனைவியுடன் பலி
04-Dec-2025
துாத்துக்குடி:துாத்துக்குடி பால்பாண்டிநகரைச் சேர்ந்தவர் மிதுன் கார்த்திகேயன், 27. ஷிப்பிங் நிறுவனத்தில் ஊழியர். இவரது மனைவி காவியசுதா, 22. இரண்டு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. 1 வயதில் மகன் உள்ளார். கணவருக்கு தெரியாமல் காவியசுதா, மொபைல் போன் செயலிகள் மூலம் பலரிடம் கடன் பெற்றுள்ளார். சரியாக தவணைத் தொகை செலுத்தாததால், கடன் கொடுத்தவர்கள் அவரை தொடர்பு கொண்டு தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது.இந்நிலையில், கடன் தொகை வசூலிப்பது தொடர்பாக காவியசுதாவிடம் பேசிய மர்மநபர்கள், பணத்தை திருப்பி செலுத்தாவிட்டால், போட்டோவை ஆபாசமாக சித்தரித்து இணையதளத்தில் வெளியிட்டு விடுவதாக மிரட்டினர். இதனால், அவர் அதிர்ச்சியடைந்தார்.வீட்டில் யாரும் இல்லாத நிலையில், நேற்று முன்தினம் காவியசுதா துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சிப்காட் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.அவரை மிரட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது குடும்பத்தினர் வலியுறுத்தியுள்ளனர். இதையடுத்து, சைபர்கிரைம் போலீசாரும் விசாரிக்கின்றனர். திருமணமாகி, இரண்டே ஆண்டுகள் ஆவதால், ஆர்.டி.ஓ.,வும் விசாரிக்கிறார்.
09-Dec-2025
05-Dec-2025
04-Dec-2025