மேலும் செய்திகள்
குலசையில் தசரா விழா கோலாகலம்
03-Oct-2025
சென்னை போலீஸ்காரர் கோவில்பட்டியில் தற்கொலை
03-Oct-2025
மாஜி போலீஸ்காரருக்கு சிறை
28-Sep-2025
கப்பலில் இருந்து விழுந்தவர் பலி
27-Sep-2025
துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டம், மேல ஆத்துார் சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த கார் டிரைவர் ஜெயக்குமார், 41. இவரது மனைவி பொன்மாரி, 35. கடந்த 2009ல் திருமணம் நடந்தது. உஷாதேவி, உமாதேவி என்ற மகள்களும், தீனா மாடசாமி என்ற மகனும் உள்ளனர்.கடந்த வாரம் வீட்டை விட்டு வெளியே சென்ற பொன்மாரி, நான்கு நாட்களுக்கு பின் மீண்டும் வீடு திரும்பியுள்ளார். பொன்மாரியின் நடத்தையில் சந்தேகமடைந்த ஜெயக்குமார் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டார்.நேற்று முன்தினம் இரவு, 8:00 மணி அளவில் வீட்டில் இருந்த போது, இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த ஜெயக்குமார், தன் மனைவியை தாக்கி, கழுத்தை நெரித்துள்ளார். மனைவி மயங்கி விழுந்ததும், அவர் தலைமறைவாகிவிட்டார். இதற்கிடையே, பொன்மாரியின் தம்பி பொன்சங்கர் வீட்டிற்கு சென்று பார்த்த போது, வாயில் ரத்தம் வடிந்த நிலையில் பொன்மாரி இறந்து கிடந்துள்ளார். ஆத்துார் போலீசார் ஜெயக்குமாரை கைது செய்தனர்.
03-Oct-2025
03-Oct-2025
28-Sep-2025
27-Sep-2025