| ADDED : ஜூலை 10, 2024 09:47 PM
கோவில்பட்டி:கோவில்பட்டி அருகே வீரன் அழகுமுத்துக்கோன் நினைவு தோரண வாயில் திறப்பு விழா நடந்தது. துாத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள கட்டாலங்குளத்தில் சுதந்திர போராட்ட வீரர் வீரன் அழகுமுத்துக்கோன் நினைவு மணிமண்டபம் மற்றும் அரண்மனை ஆகியவற்றை அரசு பராமரித்து வருகிறது. கட்டாலங்குளத்திற்கு செல்லும் வழியில் நெல்லை- - மதுரை 4 வழி தேசிய நெடுஞ்சாலையில் கோபாலபுரம் விலக்கில் சுதந்திர போராட்ட வீரர் வீரன் அழகுமுத்துகோன் நினைவு தோராண நுழைவு வாயில் உள்ளது. இந்த தோராண நுழைவு வாயில் சில ஆண்டுகளுக்கு முன்பு சிதலமடைந்தது. இதை தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தனது சொந்த செலவில் சீரமைப்பு செய்து புதுப்பித்தார். அதன் திறப்பு விழா நேற்று நடந்தது. அமைச்சர் ராஜகண்ணப்பன் சார்பில் அவரது மகன் பிரபு ன் புதுப்பிக்கப்பட்ட தோராண வாயிலை திறந்து வைத்தார். தொடர்ந்து கட்டாலங்குளம் சென்று அழகுமுத்துகோன் நினைவு மண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.இதில், சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்துகோன் வாரிசுகள் மீனாட்சிதேவி, ராஜேஸ்வரி, ராணி, நெல்லை மாநகராட்சி துணை மேயர் ராஜூ, சங்கரன்கோவில் பஞ்., யூனியன் சேர்மன் லாலா சங்கரபாண்டியன், தி.மு.க., கோவில்பட்டி மேற்கு ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், தாமோதரகண்ணன், யாதவர் சங்க தலைவர் முருகேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.