உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / துாத்துக்குடி அனல்மின் நிலையத்தில் டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு?

துாத்துக்குடி அனல்மின் நிலையத்தில் டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

துாத்துக்குடி:துாத்துக்குடி துறைமுக பகுதியில், 1,050 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட அனல்மின் நிலையம் உள்ளது. 30 ஆண்டுகளை கடந்து இயங்கி வரும் இந்த நிலையத்தில் அடிக்கடி பராமரிப்பு என்ற பெயரில் பணிகள் நடக்கின்றன. பாய்லர் பஞ்சர், கடல்நீர் அனல்மின் நிலையத்துக்குள் புகாமல் இருக்க சுற்றுச்சுவர் கட்டுவது, கழிவுகளை அகற்றுவது போன்ற பணிகளில், அரசின் விதிமுறைகளை மீறி, 'டெண்டர்' இறுதி செய்யப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.இந்நிலையில், டெண்டர்களில் போட்டியாளர்களை பங்கேற்க செய்யாமல் பெயரளவுக்கு இரண்டு நிறுவனங்களை மட்டுமே பங்கேற்க வைத்து, தங்களுக்கு வேண்டியவர்களுக்கு மட்டும் ஒப்பந்தம் வழங்கி அதிகாரிகள் அதிக லாபம் சம்பாதித்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.இதுதொடர்பாக, சிவில் ஒப்பந்ததாரர்கள் சிலர், அனல்மின் நிலைய தலைமை பொறியாளருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:கடந்த 2024 ஜூன் 28ல் நடந்த பராமரிப்பு பணிக்கான சிவில் டெண்டரில், ஒரு ஒப்பந்ததாரரின் டெண்டரை அவசர கதியில் தேர்வு செய்துள்ளனர். அந்த ஒப்பந்ததாரருக்கு எந்தவித முன் அனுபவமும் இல்லை.போட்டியாளர்களே இல்லாமல், ஆண்டு பராமரிப்பு வேலைகளை முடித்து, அதிகாரிகள் சுயலாபம் அடைந்து விடுகின்றனர். இதனால், அனல் மின்நிலையத்துக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது.மேலும், ஆண்டு பராமரிப்பு வேலைகளுக்கான டெண்டர்கள் அனைத்திலும் இரண்டு ஒப்பந்ததாரர்கள் மட்டுமே பங்கேற்க செய்கின்றனர். அவர்களில் ஒருவருக்கு பெயரளவுக்கு 1,000 ரூபாய் குறைத்து பணி ஆணை வழங்குகின்றனர்.இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Manivannan
ஜூலை 05, 2024 21:52

ஒப்பந்தத்தில் கலந்து கொள்ள தகுதியை நிர்ணயிப்பதில் ஊழல் தொடங்குகிறது.


Manivannan
ஜூலை 05, 2024 21:50

இதில் ஊழல் தொடங்கும் இடம்.. ஒப்பந்தகாரருக்கு முன் அனுபவம் ஒப்பந்தத்தில் கலந்து கொள்ள நிர்ணயிக்கும் முன் அனுபவம் தங்களுக்கு வேண்டிய ஒப்பந்தகாரரிடம் உள்ள அனுபவத்தை யே... தகுதியாக ஒப்பந்த விண்ணப்பத்தில் கோருவது.


உதயகீதன்
ஜூலை 03, 2024 07:39

தமிழக நிறுவனங்கள் அனைத்திலும் திருட்டு திராவிடர்கள் நீக்கமற நிறைந்துள்ளனர். யாரை புடிக்கிறது? யா ஐ தண்டிக்கிறது? போங்க... ஆளாளுக்கு ஆட்டையப்.போடுங்க.


S Sivakumar
ஜூலை 03, 2024 07:14

இதில் பயனாளிகள் யாரெல்லாம் உள்ளனர் என்பது தீர விசாரணையில் தான் தெரியும்


Kasimani Baskaran
ஜூலை 03, 2024 05:14

டெண்டர் எடுப்பது என்பது கட்டப்பஞ்சாயத்தில் வெற்றி பெறுவது போலத்தான். ஒரு சிலர் டெண்டர் விண்ணப்பம் வாங்கும் பொழுதே மாமூல் கொடுத்து மிரட்டி அனுப்பி விடும் நடைமுறை கூட இருக்கிறது. திராவிடர்கள் ஆண்டால் இதெல்லாம் சகஜம்.


Palanisamy Sekar
ஜூலை 03, 2024 04:47

என்றைக்கு காமராஜரை தோற்கடித்து திராவிட கட்சிகளிடம் ஆட்சி அதிகாரம் சென்றதோ அன்றிலிருந்து இன்றுவரை அனல் மின்நிலையங்களில் இதுபோன்ற திட்டமிட்ட கொள்ளைகள் அரங்கேறிக் கொண்டே செல்கின்றன. கேட்க நாதியில்லை. நிலக்கரி கொள்முதலில் செய்கின்ற விலை நிர்ணயத்தில் பல்லாயிரம் கோடி அளவுக்கு ஊழல் செம்மையாக இன்னும் நடந்துகொண்டே உள்ளன. தரமற்ற நிலக்கரி ஈரப்பதம் உள்ள நிலக்கரி போன்றவற்றிலும் அவற்றை கொண்டு செல்லும் கன்வேயரில் திட்டமிட்டே நடக்கின்ற தடைகளும் அதனால் மின்பற்றாக்குறை உருவாக்கப்பட்டு, வெளியிலிருந்து காற்றாலை மின்சார கொள்முதலில் விலையை உயர்த்தி வாங்கி அதில் நடக்கின்ற கொள்ளைகளை கணக்கிட்டால் இந்த மின் நுகருவில் விலையேற்றத்தை தடுக்க முடியும். சில பல அதிகாரிகளின் உடந்தையோடு பகல் கொள்ளையில் மின் நிலையங்களின் அட்டூழியங்கள் சொல்லி மாளாது. ஆட்சியாளர்களுக்கு ஊழலில் பங்கு வீடு தேடி போய்விடுவதால் இதுபற்றியெல்லாம் கவலையே படாமல் மின்கட்டணத்தை உயர்த்திக்கொண்டு போவார்கள். அப்பாவி மக்கள் ஓட்டுக்கு பணத்தை வாங்கிக்கொண்டு தங்களது தலையில் தாங்களே மண்ணை அள்ளிப்போடுவதால் ஆயிரம் அண்ணாமலைகள் எவ்வளவு எடுத்து சொன்னாலும் மாறுவது சிலர் மட்டும்தான். மின் உற்பத்தி இடங்களில் இருட்டில் நடக்கும் கொள்ளைகள் கோடானுகோடிகள்


மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ