உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / சாத்தான்குளத்தில் தாழ்வாக பறந்த ஹெலிகாப்டர்கள்

சாத்தான்குளத்தில் தாழ்வாக பறந்த ஹெலிகாப்டர்கள்

துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் இடைச்சிவிலை மற்றும் அரசூர் பூச்சிக்காடு பகுதியில் நேற்று மாலை இரண்டு ஹெலிகாப்டர்கள் தாழ்வாக பறந்து சென்றன. அப்பகுதி மக்கள் வியப்புடன் தாழ்வாக சென்ற ஹெலிகாப்டர்களை பார்த்து, தங்களது அலைபேசிகளில் வீடியோ எடுத்தனர்.அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. குலசேகரன்பட்டினம் பகுதியில் நடந்து வரும் இஸ்ரோ ராக்கெட் ஏவுதளம் இடத்தின் அருகே சென்ற ஹெலிகாப்டர்கள் சிறிது நேரத்தில் திரும்பி சென்றன. அவை ராணுவ ஹெலிகாப்டர்களாக இருக்கலாம் என கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்