உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / ஹோட்டல் அறை பதிவில் குளறுபடி ரூ.16.39 லட்சம் இழப்பீடு தர உத்தரவு

ஹோட்டல் அறை பதிவில் குளறுபடி ரூ.16.39 லட்சம் இழப்பீடு தர உத்தரவு

துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியைச் சேர்ந்த கவுதம், தன் தங்கையின் சட்டக்கல்லுாரி நுழைவு தேர்வுக்கு சென்னை சென்றார். சென்னையில் தங்க ஆன்லைனில் ஹோட்டல் அறை முன்பதிவு செய்தார்.சென்னையில் ஹோட்டலுக்கு சென்று அறை கேட்ட போது, முன்பதிவு தகவல் எதுவும் இல்லை எனக்கூறினர். ஹரியானாவைச் சேர்ந்த ஆன்லைன் நிறுவனத்திடம் கவுதம் தொடர்பு கொண்டு கேட்டதற்கு, வேறொரு ஹோட்டலில் அறை ஏற்பாடு செய்வதாக தெரிவித்தனர்.அங்கும் சரியான பதில் இல்லாததால், வேறு ஒரு ஹோட்டலுக்கு செல்லுமாறு தெரிவித்தனர். ஆனால், அந்த ஹோட்டல் நிர்வாகத்தினர் ஏற்கனவே செலுத்தப்பட்ட தொகையுடன் 600 ரூபாய் அதிகமாக செலுத்த வேண்டும் எனக் கூறினர்.வேறு வழியின்றி அந்த பணத்தை கவுதம் செலுத்தினார். கால தாமதமானதால் சட்டக் கல்லுாரி நுழைவுத் தேர்வை எழுதிய அவரது தங்கை தேர்வில் தேர்ச்சி பெறவில்லை. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான கவுதம், ஹரியானா நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பினார்.உரிய பதில் கிடைக்காததால், துாத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆணைய தலைவர் திருநீல பிரசாத், உறுப்பினர்கள் சங்கர், நமச்சிவாயம் ஆகியோர் விசாரித்தனர்.ஏற்கனவே, ஆன்லைனில் செலுத்தப்பட்ட 6,797 ரூபாய், மீண்டும் சட்டக்கல்லுாரி நுழைவுத் தேர்வுக்கு படிப்பதற்கான செலவுத் தொகை, 1 லட்சத்து 23,000 ரூபாய், ஒழுங்குமுறையற்ற வர்த்தக நடவடிக்கைக்காக, 10 லட்சம் ரூபாய், சேவை குறைபாடு மற்றும் மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடு தொகை, 5 லட்சம் ரூபாய், வழக்கு செலவுத் தொகை, 10,000 ரூபாய் என, 16 லட்சத்து 39,797 ரூபாயை இரு மாத காலத்திற்குள் வழங்க உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை