உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / ஸ்ரீவை., யூனியன் அலுவலகத்தை 100 நாள் பணியாளர்கள் முற்றுகை

ஸ்ரீவை., யூனியன் அலுவலகத்தை 100 நாள் பணியாளர்கள் முற்றுகை

துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் யூனியன், தோழப்பன்பண்ணை பஞ். பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், நுாறு நாள் வேலைக்கான பயனாளர் அடையாள அட்டை வைத்துள்ளனர். மாதத்திற்கு ஒரு நபருக்கு, ஐந்து நாள் வேலை மட்டுமே கொடுப்பதாக புகார் எழுந்துள்ளது.இந்நிலையில், முழுமையாக வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தி, அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில், ஸ்ரீவைகுண்டம் யூனியன் அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டு போராட்டம் நடந்தது. போராட்டக்காரர்களுடன் பி.டி.ஓ., ராஜேஷ் பேச்சு நடத்தினார்.தோழப்பன்பண்ணை பஞ். பகுதி மக்களுக்கு நுாறு நாள் வேலை திட்டத்தில் முழுமையாக வேலை வழங்க நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதி அளித்தார். இதையடுத்து, போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ