உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / சங்கு குளித்த சிறுவன் மூச்சுத்திணறி பலி

சங்கு குளித்த சிறுவன் மூச்சுத்திணறி பலி

துாத்துக்குடி:ராமநாதபுரம் மாவட்டம் வேலாயுதபுரம் களிமண்குண்டு பகுதியை சேர்ந்தவர் முனியகோகுல் 17. துாத்துக்குடியில் சங்குகுளிப்பு தொழிலில் ஈடுபட்டு வந்தார். சக்தீஸ்வரன், சக்திவேல் உட்பட 7 பேருடன் சேர்ந்து முனியகோகுல் நேற்று முன்தினம் காலை துாத்துக்குடி கடலில் சங்குகுளித்துக் கொண்டிருந்தார். பிற்பகல் கடலில் இருந்து படகிற்கு வந்த முனியகோகுலுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுஉள்ளது. துாத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு டாக்டர்கள் பரிசோதனையில் முனியகோகுல் ஏற்கனவே இறந்தது தெரிந்தது. இது குறித்து மரைன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை