உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / நண்பரை காப்பாற்ற முயன்றவர் மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு

நண்பரை காப்பாற்ற முயன்றவர் மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு

துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டம், திருச்செந்துார் வீரகாளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராஜா மணிகண்டன், 20. ஐ.டி.ஐ., படித்துள்ளார். கடந்த 26ம் தேதி, கரம்பவிளை தேவாலயம் வடபுறம் உள்ள நண்பர் பாலாகுட்டி என்பவர் மாட்டுத் தொழுவத்துக்கு சென்றார்.தண்ணீர் தொட்டியில் உட்கார்ந்து பாலாகுட்டியிடம் பேசிக் கொண்டிருந்தார். அருகில் உள்ள பனங்கட்டையில் அறுந்து தொங்கிக் கொண்டிருந்த மின் வயரில் பாலா குட்டி கை பட்டு ஷாக் அடித்தது. ராஜாமணிகண்டன், பாலாகுட்டியை தள்ளி விட்டபோது அவர் மீதும் மின்சாரம் பாய்ந்தது.பின், ராஜாமணிகண்டனை பாலாகுட்டி கீழே தள்ளிவிட்டார். ஆனால், அவர் பேச்சு மூச்சு இல்லாமல் கிடந்தார். ராஜாமணிகண்டனை ஆட்டோவில் ஏற்றி திருச்செந்துார் தனியார் மருத்துவமனைக்கு துாக்கிச் சென்றனர்.பரிசோதனை செய்த டாக்டர்கள், ராஜா மணிகண்டன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதை உறுதி செய்தனர்.இதுகுறித்து, திருச்செந்துார் கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி