| ADDED : மே 03, 2024 02:25 AM
துாத்துக்குடி:எட்டயபுரம் அருகே பயணிகளை ஏற்றிச் சென்ற வேன் பின் டயர் வெடித்ததில் நிலைகுலைந்து கவிழ்ந்தது. இதில் மதுரையைச் சேர்ந்த 14 பேர் காயமடைந்தனர்.மதுரை மாவட்டம் சங்கிமங்கலம் பாரதி நகர் சந்திரா 39, தருண்பாண்டியன் 13, அசோக் குமார் 28, அன்னக்கிளி 13, லட்சுமி 40, தனலட்சுமி 35, உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் வேனில் நேற்று மதுரையிலிருந்து தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே எப்போதும்வென்றான் சோழசாமி கோயில் சித்திரை விழாவுக்கு சென்றனர்.வேனை ஆரோக்கிய ஆண்டனி 21, ஓட்டினார். எட்டயபுரம் அருகே கீழஈரால் 4 வழிச்சாலையில் சென்றபோது வேன் பின்பக்க டயர் வெடித்து கட்டுப்பாட்டை இழந்து சென்டர் மீடியனில் மோதி கவிழ்ந்தது. இதில் டிரைவர் உட்பட 14 பேரும் காயமடைந்தனர். எட்டயபுரம் போலீசார் விசாரித்தனர்.