உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / குவாரிக்கு கிராம மக்கள் எதிர்ப்பு; கருப்பு கொடி ஏற்றி போராட்டம்

குவாரிக்கு கிராம மக்கள் எதிர்ப்பு; கருப்பு கொடி ஏற்றி போராட்டம்

துாத்துக்குடி : துாத்துக்குடி மாவட்டம், கயத்தார் தாலுகா செட்டிக்குறிச்சியில் இரண்டு கல் குவாரிகள் உள்ளன. பாதிப்புகள் அதிகமாக இருப்பதால், அந்த குவாரிகளை மூட வேண்டும் என, மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தனர். இருப்பினும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில், வீடுகளுக்கு அருகே புதிதாக இரண்டு கல் குவாரிகள் தொடங்க பணிகள் நடந்து வருகின்றன. இதற்கு அனுமதி கூடாது என, அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். எனினும், எந்த தடையுமின்றி பணிகள் நடப்பதால், அதிகாரிகளை கண்டித்து செட்டிக்குறிச்சி முழுதும் நேற்று கடைகள் அடைக்கப்பட்டன. சாலைகளில் உள்ள மின்கம்பங்களில் கருப்பு கொடி கட்டி, மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். செட்டிக்குறிச்சி கிராமம் வெறிச்சோடியது.விவசாயி செந்துார்பாண்டி கூறியதாவது: செட்டிக்குறிச்சியில் தற்போது இயங்கி வரும் கல் குவாரிகளில் பயன்படுத்தப்படும் வெடி மருந்துகளால் வீடுகள், விவசாய நிலங்கள் சேதமடைகின்றன. அரசு விதிமுறைகள் எதையும் கல் குவாரிகள் கடைப்பிடிப்பதில்லை. இரவு, பகலாக கனரக லாரிகளில் சட்ட விரோதமாக கனிமங்கள் கடத்தப்படுகின்றன. அதிகாரிகளின் அனுமதியோடு அனைத்து முறைகேடுகளும் நடக்கின்றன. நான்கு பேர் பிழைக்க, 4,000 பேர் தினமும் அவதிப்படுகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை