உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / கூரை காரை விழுந்து தொழிலாளி படுகாயம்

கூரை காரை விழுந்து தொழிலாளி படுகாயம்

துாத்துக்குடி : துாத்துக்குடி மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்துக்கு உட்பட்ட கோமஸ்புரம் அருகே அமைந்துள்ளது ராஜிவ்காந்தி நகர். இங்கு, தற்போது, நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் என பெயர் மாற்றப்பட்டுள்ள, குடிசை மாற்று வாரியம் சார்பில், எட்டு ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன.முதலாவது பிளாக்கில் மூன்றாவது மாடியில் உள்ள வீட்டில், உப்பள தொழிலாளி அருண்பாண்டியன், 23, மற்றும் குடும்பத்தினர் வசிக்கின்றனர். வீட்டின் படுக்கை அறையில் கட்டிலில் படுத்து உறங்கிக் கொண்டிருந்த அருண்பாண்டியன் மீது, நேற்று அதிகாலை திடீரென வீட்டின் கான்கிரீட் காரை பெயர்ந்து விழுந்தது. இதில், அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அருகில் உள்ளவர்கள், அவரை துாத்துக்குடி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை