உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / துாத்துக்குடியில் போக்சோ வழக்கில் கைதான வாலிபருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை

துாத்துக்குடியில் போக்சோ வழக்கில் கைதான வாலிபருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை

துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் பகுதியில் 2018 ல் 17 வயது சிறுமியை பாலியல் வன்புணர்ச்சி செய்த வழக்கில், உடன்குடியை சேர்ந்த மணிகண்டன், 28, என்பவரை குலசேகரன்பட்டினம் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணை துாத்துக்குடி மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.வழக்கை விசாரித்த நீதிபதி மாதவ ராமானுஜம் குற்றம்சாட்டப்பட்ட மணிகண்டனுக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், 3,000 ரூபாய் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு வழங்கினார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு இழப்பீட்டு நிதியில் இருந்து இரண்டு லட்சம் ரூபாய் வழங்கவும் அவர் உத்தரவிட்டார்.இதையடுத்து, மணிகண்டன் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். வழக்கில் சிறப்பாக செயல்பட்ட இன்ஸ்பெக்டர் பிரேமா மற்றும் போலீசாருக்கு எஸ்.பி., பாலாஜி சரவணன் பாராட்டு தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி