| ADDED : ஆக 03, 2024 10:08 AM
வயநாடு நிலைச்சரிவு போன்ற இயற்கை சீற்றத்திற்கு மக்களின் சுயநலம் தான் காரணம் - தமிழகத்தை நோக்கியும் இயற்கை பேரழிவு வருகிறது - ஆவேச அருள்வாக்கு கூறிய பூசாரிதூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நடராஜபுரம் தெருவில் உள்ள ஸ்ரீ சிவசக்தி பத்திரகாளியம்மன் திருக்கோவில், ஸ்ரீ மலையாளத்து சுடலை மகாராஜா திருக்கோவில் ஆடிக் கொடை விழா மற்றும் பூக்குழி திருவிழா கடந்த 1ந் தேதி தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சாமக்கொடை மற்றும் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி இன்று அதிகாலை நடைபெற்றது. இதில் அக்கோவில் பூசாரி ஸ்ரீ சங்கர் சுவாமிகள் கை மற்றும் நாக்கு ஆகியவற்றை அறுத்து அதில் வழிந்த இரத்தத்தை உணவில் கலந்து சாப்பிடும் நிகழ்ச்சி முதலில் நடைபெற்றது. இதையடுத்து ஆட்டினை அறுத்து அது சுடலை மகாராஜா சுவாமிக்கு ஊட்டு கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.இதன் பின்னர் ஸ்ரீ சங்கர் சுவாமிகள் குழந்தைகளை கையில் வைத்துக் கொண்டு மேளதாளம் முழங்க பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதையடுத்து விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு சங்கர் சுவாமிகள் அருள்வாக்கு வழங்கினார். அப்போது அவர் கூறுகையில் தர்மம் ,, அழிந்து அநீதி அதிகரித்த காரணத்தினால் தான் வயநாடு நிலச்சரிவு போன்ற இயற்கை சீற்றங்கள் நடைபெற்று வருவதாகவும், அந்த இயற்கை சீற்றங்கள் தமிழகத்தை நோக்கி வருவதாகவும், மக்களின் சுயநலம்தான் இதற்கு காரணம் என்றார். இதில் கோவில்பட்டி மட்டுமின்றி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.