இலங்கைக்கு கடத்த முயன்ற பீடி இலை பறிமுதல்
துாத்துக்குடி:இலங்கைக்கு பீடி இலைகள் கடத்த முயற்சி நடப்பதாக துாத்துக்குடி க்யூ பிரிவு போலீசுக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் விஜய அனிதா, எஸ்.எஸ்.ஐ., ராமர், ஏட்டு இருதய ராஜ்குமார், மற்றும் போலீசார் திரேஸ்புரம் கடற்கரையில் கண்காணித்தனர்.நேற்று முன் தினம் அதிகாலை 1:30 மணிக்கு அங்கு நிறுத்தியிருந்த லோடு வேனை சுற்றி வளைத்தனர். வேனில் இருந்தவர்கள் குதித்து இருட்டில் ஓடி தப்பினர். போலீசார் வேனை சோதனையிட்டபோது 30 கிலோ கொண்ட 24 மூட்டைகள் பீடி இலை இருந்தது. இதன் மதிப்பு, 1.20 லட்சம் ரூபாய். வேன் மற்றும் பீடி இலை மூட்டைகளை சுங்கத்துறையிடம் ஒப்படைத்தனர். தப்பியவர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.