உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / மத்திய குழு 2வது முறையாக ஆய்வு

மத்திய குழு 2வது முறையாக ஆய்வு

துாத்துக்குடி:திருநெல்வேலி, துாத்துக்குடி மாவட்டங்களில் டிச. 17, 18ல் கன மழை பெய்தது. தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் பல கிராமங்கள் மூழ்கின. துாத்துக்குடி மாவட்டத்தில் உயிரிழப்புகளுடன் ஏராளமானவர்கள் வீடு சொத்துக்களை இழந்தனர். இந்த பாதிப்புகளை மத்தியக் குழுவினர் தேசிய பேரிடர் மேலாண்மை ஆலோசகர் கே.பி.சிங் தலைமையில் டிச., 21ல் பார்வையிட்டனர்.மழை நீர் முழுமையாக வடியாமல் இருந்ததால் பாதிப்புகளை கண்டறிய முடியவில்லை. இந்நிலையில் நேற்று மத்திய குழுவினர் மீண்டும் ஆய்வு செய்தனர். தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையக் குழு ஆலோசகர் கே.பி.சிங் தலைமையில் அலுவலர்கள் நேற்று துாத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை மேற்கொண்டனர்.பின், இரு குழுக்களாகப் பிரிந்து ஏரல், முறப்பநாடு, துாத்துக்குடி உட்பட 24 இடங்களை ஆய்வு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை