உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / விவசாயி கார் ஏற்றி கொலை பஞ்., தலைவரின் கணவர் சரண்

விவசாயி கார் ஏற்றி கொலை பஞ்., தலைவரின் கணவர் சரண்

துாத்துக்குடி : துாத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே ஆதிச்சநல்லுாரை சேர்ந்தவர் சங்கர்கணேஷ், 40; ஆதிச்சநல்லுார் பஞ்., தலைவராக இருந்தார். தற்போது அவரது மனைவி தலைவராக உள்ளார்.ஆதிச்சநல்லுாரில் உள்ள வாழைத்தோட்டம் தொடர்பாக, சங்கர் கணேஷுக்கும், அதே ஊரைச் சேர்ந்த நல்லகண்ணு, 51, என்பவருக்கும் முன்விரோதம் இருந்தது. நல்லகண்ணு, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அணியின் ஒன்றிய செயலராக இருந்தார்.திருநெல்வேலி -- திருச்செந்துார் சாலையில் ஆதிச்சநல்லுார் அருகே சுப்பிரமணியபுரத்தில் இருவருக்கும் நேற்று காலை வாக்குவாதம் ஏற்பட்டபோது, சங்கர்கணேஷ், தான் வந்த காரில் புறப்பட்டுள்ளார். அப்போது, நல்லகண்ணு மீது அவரது கார் மோதியுள்ளது.நல்லகண்ணு பலத்த காயமடைந்து திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, இறந்தார். திருநெல்வேலி மருத்துவமனையை முற்றுகையிட்ட அவரது உறவினர்கள், 'ஏற்கனவே ஸ்ரீவைகுண்டம் போலீசில் புகார் செய்தும் சங்கர்கணேஷ் மீது நடவடிக்கை எடுக்கவில்லை' என, புகார் கூறினர்.சங்கர்கணேஷ் அ.தி.மு.க., - தி.மு.க., உள்ளிட்ட கட்சிகளில் இருந்துள்ளார். சமீபத்தில் பா.ஜ.,வில் இணைந்துள்ளார். இதற்கிடையே, சங்கர்கணேஷ் காருடன் போலீசில் சரணடைந்தார். எஸ்.பி., பாலாஜி சரவணன் சம்பவ இடத்தை பார்வையிட்டார். ஸ்ரீவைகுண்டம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை