உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / காரப்பேட்டை பள்ளியில் இலக்கிய மன்ற துவக்கவிழா

காரப்பேட்டை பள்ளியில் இலக்கிய மன்ற துவக்கவிழா

தூத்துக்குடி : தூத்துக்குடி காரப்பேட்டை நாடார் மேல்நிலைப்பள்ளியில் இலக்கிய மன்ற துவக்க விழா நடந்தது.விழாவில் மாணவர்கள் பேச்சாற்றலின்போது வெளிப்படுத்த வேண்டிய திறமைகள், கட்டுரை எழுதுதலில் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள், கவிதைகள் எழுதுவதற்காக கற்பனைத்திறனை வளர்த்துக் கொள்ள வேண்டியதன் அவசியம் ஆகியன குறித்து முதுநிலைத் தமிழாசிரியர் சாமுவேல் கோயில்ராஜ் மற்றும் தமிழாசிரியர்கள் சுசீந்திரன், சின்னத்தம்பி, பொன்னையா ஆகியோர் பேசினர். முதுநிலைத் தமிழாசிரியர் கண்ணன் தொகுப்புரை வழங்கினார். மாணவர்களிடையே பேச்சாற்றலை வளர்க்கும் பொருட்டு ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமையன்று நடக்கும் மாணவர் பேரவைக் கூட்டத்தில் தமிழ் இலக்கிய மன்ற மாணவர்களில் ஒருவர் குறைந்தபட்சம் நான்கு நிமிடங்களாவது தூய தமிழில் பேச முன்வரவேண்டும் என தலைமையாசிரியர் நடராஜன் கேட்டுக் கொண்டார். அதன் அடிப்படையில் உடனடியாக ஏராளமான மாணவர்கள் தங்கள் பெயரினைப் பதிவு செய்து கொண்டனர். தமிழ் இலக்கிய மன்ற பொறுப்பாசிரியர் ஆனந்தராஜ் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை