உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / விளாத்திகுளம் டூ ஓட்டப்பிடாரம் புதிய வழித்தடம் துவக்க விழா

விளாத்திகுளம் டூ ஓட்டப்பிடாரம் புதிய வழித்தடம் துவக்க விழா

விளாத்திகுளம் : விளாத்திகுளத்திலிருந்து ஓட்டப்பிடாரத்திற்கு புதிய வழித்தடத்தை எம்எல்ஏ.,மார்க்கண்டேயன் துவக்கி வைத்தார். விளாத்திகுளத்திலிருந்து சிவஞானபுரம், எப்போதும்வென்றான், வெள்ளாரம் வழியாக ஓட்டப்பிடாரத்திற்கு புதிய வழித்தடத்தில் பஸ்போக்குவரத்தை எம்எல்ஏ.,மார்க்கண்டேயன் விளாத்திகுளம் பஸ்-ஸ்டாண்டில் துவக்கி வைத்தார். தினசரி காலை 6.05 மணிக்கும், மாலை 4.40 மணிக்கும் விளாத்திகுளத்திலிருந்து இந்த பஸ் ஓட்டப்பிடாரத்திற்கு புறப்படுகிறது. ஓட்டப்பிடாரத்திலிருந்து காலை 7.30 மணிக்கும், மாலை 6.15 மணிக்கும் விளாத்திகுளத்திற்கு புறப்படுகிறது. இதனால் சிவஞானபுரம், எப்போதும்வென்றான், ஓட்டப்பிடாரம், விளாத்திகுளம் மற்றும் சுற்றுவட்டார கிராமமக்கள் பெரிதும் பயன்பெறுவார்கள். துவக்க விழா நிகழ்ச்சியில் அரசு போக்குவரத்துக்கழக கோட்ட மேலாளர் கண்ணபிரான், விளாத்திகுளம் கிளை மேலாளர் இருதயராஜ், டைம்கீப்பர்கள் குமாரசாமி, ராஜபாண்டி, அதிமுக.,ஒன்றிய செயலாளர் ரூபம்வேலவன், நகர செயலாளர் நெப்போலியன், அண்ணா தொழிற்சங்க மாவட்ட இணை செயலாளர் முத்துராஜா, மாவட்ட மகளிரணி இணை செயலாளர் குமாரத்தாய், ஒன்றிய ஜெ.,பேரவையை சேர்ந்த வசந்தம் ஜெயக்குமார், குட்லக் செல்வராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி