உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / கோவில்பட்டியில் விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்

கோவில்பட்டியில் விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்

கோவில்பட்டி : கோவில்பட்டியில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழ்நாடு விவசாயிகள் சங்க சார்பில் கோவில்பட்டி தாலுகா அலுவலகம் அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் பெருமாள் தலை மை வகித்தார். தொடர்ந்து குடிமனை இல்லாதோர்க்கு குடிமனை பட்டா வழங்கவும், கோயில் மற்றும் மடங்களின் நிலத்தில் குடியிருப்போருக்கு பட்டா வழங்குவது உட்பட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழு ப்பியதுடன் பலர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் சங்க கோவில்பட்டி ஒன்றியக்குழு நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை