மேலும் செய்திகள்
விபத்தில் 2 வாலிபர்கள் இறப்பு
04-Oct-2025
குலசையில் தசரா விழா கோலாகலம்
03-Oct-2025
சென்னை போலீஸ்காரர் கோவில்பட்டியில் தற்கொலை
03-Oct-2025
மாஜி போலீஸ்காரருக்கு சிறை
28-Sep-2025
கப்பலில் இருந்து விழுந்தவர் பலி
27-Sep-2025
ஸ்ரீவைகுண்டம் : ஸ்ரீவைகுண்டம் அருகே ஆழ்வார்க ற்குளத்தில் குடும்பதகராரில் மனைவியை கழுத்தைஅறுத்து கொன்ற கணவனை போலீசார் தேடிவரு கின்றனர் இதுக்குறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது ; ஸ்ரீவை குண்டம் அருகே உள்ள மணக்கரை கிராமத்தை சேர்ந்த மந்திரம் என்பவரின் மகள் இசக்கியம்மாள் (24) இவருக்கும் ஆழ்வார் கற்குளத்தை சேர்ந்த உடையார் மகன் சப்பாணி (29) என்பவரு க்கும் கடந்த 6ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு இரண்டு ஆண்குழந்தையும் ஓருபெண் குழந்தை யும் உள்ளது. இதில் சப்பாணி வீடு கட்டுவதற்காக தனது மனை வியின் நகைளை அடகுவைத்துள்ளார். இந்நிலையில் அடகு வைத்த நகைகளை சப்பாணி திருப்பாமல் இருந்ததால் கணவன் மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்படுமாம். நேற்று மீண்டும் கணவன் மனைவிக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த சப்பாணி அங்குள்ள குளக்கரையில் இசக்கியம்மாள் விறகு பொறுக்கி கொண்டு இருக்கும் போது அறிவாளால் இசக் கியம்மாள் தலையை அறுத்து கொலை செய்துவிட்டு தப்பிஓடி விட்டார். இதில் சம்பவஇடத்தில் இசக்கியம்மாள் இறந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி ஸ்டீபன் ஜேசுபாதம், ஸ்ரீவைகுண்டம் இன்ஸ்பெக்டர் அருள் முருகன்,சப் இன்ஸ்பெக்டர் சேக்முகமது ஆகியோர் விரைந்து சென்று இசக்கியம்மாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோ தனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய சப்பாணியை தேடிவருகின்றனர். இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
04-Oct-2025
03-Oct-2025
03-Oct-2025
28-Sep-2025
27-Sep-2025