உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / நாகலாபுரத்தில் ஓசோன் படல பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

நாகலாபுரத்தில் ஓசோன் படல பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

புதூர் : புதூர் அருகே உள்ள நாகலாபுரம் எஸ்.ஏ.என்.மேல்நிலைப்பள்ளி பசுமைப்படை இயக்கம் மற்றும் என்.சி.சி.இயக்கம் சார்பாக ஓசோன் படல பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. பேரணி எஸ்.ஏ.என்.மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இருந்து துவங்கியது. முன்னதாக பள்ளி தலைமையாசிரியர் முருகாண்டிசாமி தலைமை வகித்து ஓசோன் படல பாதுகாப்பு மிக அவசியம் பற்றி விரிவாக விளக்கிய பின்னர் பேரணியை கொடி அசைத்து துவக்கி வைத்தார். ஆங்கில முதுகலை ஆசிரியை ஆறுமுகரத்தினம், என்.எஸ்.எஸ். திட்ட அலுவலர் ஆறுமுகச்சாமி, நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர் குணசீலன், ஜே.ஆர்.சி.கவுன்சிலர் அன்பு, பள்ளியின் முன்னாள் எய்ட்ஸ் கல்வி பயிற்சியாளர் சுரேஷ்குமார் மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். என்.சி.சி. அலுவலர் ஜான் ஸ்டானி வரவேற்றார். பேரணியில் மாணவ, மாணவியர்கள் ஓசோன் படல விழிப்புணர்வு வாசக அட்டைகளை கைகளில் ஏந்திய படியும் கோஷங்கள் எழுப்பிய படியும் சென்றனர். பேரணி ரெட்டியபட்டி ரோடு, விளாத்திகுளம் ரோடு, மெயின் பஜார், நாடார்தெரு, சந்தைப்பேட்டை ரோடு, அருப்புக்கோட்டை ரோடு, முதலியார் தெரு உட்பட பல்வேறு தெருக்களின் வழியாக சென்று பள்ளி வளாகத்தை வந்து அடைந்தது. பசுமைப்படை கல்வி ஆசிரியை சுப்புலட்சுமி நன்றி கூறினார். பேரணியில் பசுமைப்படை இயக்கம் மற்றும் என்சிசி இயக்க மாணவ, மாணவியர்கள், பள்ளி ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ