| ADDED : ஜன 12, 2024 12:36 AM
துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே கடற்கரை கிராமம் வேம்பாரை சேர்ந்தவர் முத்துக்குமார். இவரது மகன் அஸ்வின்குமார், 7.அங்குள்ள பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்தார். உடல்நலக்குறைவால் நேற்று முன்தினம் வீட்டில் இருந்தார். நேற்று முன்தினம் காலையில் கழுத்தில் கத்திக்குத்து காயத்துடன் கொலை செய்யப்பட்டு கிடந்தார். வேம்பார் போலீசார் விசாரணையில், இக்கொலை தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த தாமஸ், 19, என்பவரை கைது செய்தனர்.கஞ்சா போதை பழக்கத்திற்கு அடிமையான தாமஸ், சிறுவனிடம் இருந்த மொபைல் போனை பறித்த போது ஏற்பட்ட தகராறில், கொலை நடந்திருப்பது தெரியவந்தது. மேலும், சிறுவனை ஓரினச்சேர்க்கைக்கு கட்டாயப்படுத்திய புகார் குறித்தும் விசாரணை நடக்கிறது.