மேலும் செய்திகள்
விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்டவர் மரணம்
02-Aug-2025
துாத்துக்குடி:நாயை விட்டு வேட்டையாடி, புள்ளி மான் கறியை சமைத்து சாப்பிட்டவரை வனத்துறையினர் கைது செய்தனர். துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் உள்ள குருமலையை சுற்றியுள்ள கடம்பூர், கயத்தாறு பகுதிகளில் வேட்டை நாய்களை பயன்படுத்தி, சிலர், முயல், மான், மயில் போன்றவற்றை வேட்டையாடி சமைத்து சாப்பிடுவதாக புகார்கள் உள்ளன. இதையடுத்து, குருமலை, ஊத்துப்பட்டி, பாறைப்பட்டி, கடம்பூர், கயத்தாறு உள்ளிட்ட பகுதிகளில், சில நாட்களாக, வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். கடம்பூர் அருகே கொத்தாளி கிராமத்தில், நேற்று முன்தினம் இரவு, தோட்டத்தில் சோதனை நடத்தி, புள்ளி மானின் நான்கு கால்களை கைப்பற்றினர். விசாரணையில், நாயை விட்டு வேட்டையாடி புள்ளிமான் கறியை சமைத்து சாப்பிட்டது தெரிய வந்தது. இதுதொடர்பாக, பன்னீர்குளத்தை சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் முத்துப்பாண்டி, 38, என்பவரை கைது செய்தனர். அவர் பயன்படுத்திய கார், மான் கால்கள் பறிமுதல் செய்யப்பட்டன. உடந்தையாக இருந்த திருநெல்வேலி மாவட்டம், குறிச்சிகுளத்தை சேர்ந்த சுடலைமணியை தேடி வருகின்றனர்.
02-Aug-2025