மேலும் செய்திகள்
துபாய் தொழிலதிபர் வெட்டி கொலை
09-Dec-2025
எஸ்.ஐ., கணவர் கொலை வழக்கில் விவசாயி கைது
05-Dec-2025
பைக் மீது கார் மோதல் வியாபாரி மனைவியுடன் பலி
04-Dec-2025
துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டம், கழுகுமலை அருகே சுப்பிரமணியபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட கிராமம் ஜம்புலிங்கபுரம். இக்கிராம மக்களுக்கு, மயானத்திற்கு செல்லும் பாதை தொடர்பாக பிரச்னை இருந்தது. மயான பாதையை தன் சொந்த நிலம் எனக் கூறி ஒருவர் மூன்று ஆண்டுகளுக்கு முன் வேலி அமைத்தார். இதனால் மயானத்திற்கு பக்கத்து வயல்கள் வழியே இதுவரை சென்று வந்தனர். தற்போது அங்கு நெல் பயிரிடப்பட்டுள்ளதால், வயல் வழியே செல்வதற்கு முடியவில்லை.எனவே மயானத்திற்கு செல்ல பாதை ஏற்படுத்தி தர வலியுறுத்தி, கிராம மக்கள், நேற்று இறந்த மூதாட்டி வள்ளியம்மாள் உடலை கழுகுமலை - - கயத்தாறு சாலையில் வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
09-Dec-2025
05-Dec-2025
04-Dec-2025