உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / மின்சாரம் தாக்கி மாணவர் பலி

மின்சாரம் தாக்கி மாணவர் பலி

தூத்துக்குடி:தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் மீரான்பாளையம் தெருவை சேர்ந்த முருகன் மகன் மனோஜ்குமார் 13.அரசு மேல்நிலைப் பள்ளியில் 8ம் வகுப்பு படித்தார். நேற்று முன்தினம் மாலையில் அங்கு அம்பாள் நகரில் உள்ள பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்தார். ஒரு மின்கம்பத்தை தொட்டதில் மனோஜ் குமார் மின்சாரம் தாக்கி பலியானார். அதன் மேல் பகுதியில் சென்ற உயரழுத்த மின்கம்பியில் இருந்து மின்கசிவு ஏற்பட்டது தெரியவந்தது. பூங்காவை பேரூராட்சி முறையாக பராமரிக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டினர். விளாத்திகுளம் போலீசார் விசாரித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை