மேலும் செய்திகள்
குலசையில் தசரா விழா கோலாகலம்
03-Oct-2025
சென்னை போலீஸ்காரர் கோவில்பட்டியில் தற்கொலை
03-Oct-2025
மாஜி போலீஸ்காரருக்கு சிறை
28-Sep-2025
கப்பலில் இருந்து விழுந்தவர் பலி
27-Sep-2025
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கீழ பாண்டவர்மங்கலத்தை சேர்ந்தவர் இன்னாசிமுத்து 56. வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி மருதம்மாள் 54. ஜன.3 இரவில் இருவருக்கும் குடும்ப பிரச்னையில் தகராறு ஏற்பட்டது. இரவில் மனைவி மருதம்மாளை வெட்டிக் கொலை செய்துவிட்டு இன்னாசிமுத்துவும் விஷம் அருந்தியிருந்தார். மறுநாள் காலையில் மருதம்மாளின் தம்பி மருது அவர்களின் வீட்டுக்கு சென்றார்.கதவு திறக்கப்படாததால் உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு மருதம்மாள் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அங்கிருந்த இன்னாசிமுத்து அரிவாளால் மருதுவை வெட்டி விட்டு தப்பி ஓடினார். மருது அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். போலீசார் இன்னாசிமுத்துவை கைது செய்து கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் இறந்தார்.
03-Oct-2025
03-Oct-2025
28-Sep-2025
27-Sep-2025