உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / மாணவரை கத்தியால் குத்திய ஏட்டு எண்ணுகிறார் கம்பி

மாணவரை கத்தியால் குத்திய ஏட்டு எண்ணுகிறார் கம்பி

துாத்துக்குடி:பிளஸ் 1 மாணவரை கத்தியால் குத்திய, போலீஸ் ஏட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். துாத்துக்குடி மாவட்டம், ஆழ்வார்திருநகரி வேலவன் காலனியை சேர்ந்த சிவனேச செல்வன், 31, என்பவர், ஏரல் காவல் நிலையத்தில், ஏட்டாக பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம், ஆழ்வார்திருநகரி அருகே உள்ள பள்ளியில், தன் குழந்தையை விட்டு வந்து கொண்டிருந்தபோது, செந்தில் ஆறுமுகம், 20, என்பவர், அப்பகுதியில் பைக்கில் வேகமாக சென்றார். அவரை சிவனேச செல்வன் திட்டியதால், அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, அங்கு வந்த செந்தில் ஆறுமுகத்தின் தம்பி அர்ஜுன், 17, என்பவர் சிவனேச செல்வனிடம் பேசியதில் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சிவனேச செல்வன், கையில் வைத்திருந்த சிறிய கத்தியால், அர்ஜுனை குத்தினார். இதில், காயமடைந்த அர்ஜுன், திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். செந்தில் ஆறுமுகம் புகாரின்படி, ஆழ்வார்திருநகரி போலீசார் சிவனேச செல்வனை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை